ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது அது வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு நேர தொகுப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் ப்ரோமோ ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது நெல்சனை ரஜினிகாந்த் பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அதற்கு நெல்சன், லதா ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 168 படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது தனது 169 படமாக ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறையின் ஜெயிலராக நடித்து இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கிஷரஃப், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் இந்த படத்தில் ட்ரைலர் நாளை வெளியாகும் என்று படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் நிலையில் 9 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. இத்தனை நாட்களாக வெளியாகாத ட்ரைலரை படக்குழுவினர் நாளை வெளியிட இருக்கின்றனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் படம் மிக நன்றாக வந்திருப்பதாக சென்சார் போர்டில் இருந்து பலர் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதன் முழு தொகுப்பை வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு சன் தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கின்றனர். அதற்காக ஒவ்வொரு ப்ரோமக்களாக வெளியிட்டு வருகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நெல்சனை ரஜினிகாந்த் பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய ரஜினிகாந்த், “நெல்சன் ஒருமுறை தன்னிடம் உங்கள் காதல் கதைகளை கூறுமாறு கேட்டார். நீங்கள் எத்தனை ஹீரோயின்களை காதலித்திருக்கிறீர்கள் என்று தன்னிடம் கேட்டார். அதற்கு நான் ஏன் அதை சொல்ல வேண்டும் என்று கேட்டேன், அதற்கு சும்மா சார்ஜ் ஏற்றுக் கொள்வதற்காக என்று சொன்னார். இவர் சார்ஜ் ஏத்திக்க நான் லவ் பண்ண ஆளுங்க பேரெல்லாம் சொல்லனுமா? என்று நெல்சனை பங்கமாக கலாய்த்தார் சூப்பர் ஸ்டார். அவரின் அந்த பேச்சை கேட்டதும் நெல்சன், லதா ரஜினிகாந்த், தமன்னா, அனிருத், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் என அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து இருக்கின்றனர் அதை ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கின்றனர் நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv