நேற்று தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில், பலரும் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
52 வயதானரின் காலில் 72 வயதான சூப்பர் ஸ்டார் காலில் விழுந்தது முறையல்ல என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் தான் ஜெயிலர். ரஜினியின் 169 ஆவது படமாக இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. சுமார் 7 நாட்களில் 375 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து சாதனை புரிந்தது இந்த திரைப்படம்.
திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை பயணத்தை தொடங்கி இருந்தார் ரஜினிகாந்த். கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக இமயமலை பயணம் செல்லாமல் இருந்த அவர் தற்போது மீண்டும் இமயமலைக்கு கிளம்பி இருக்கிறார்.
இந்த பயணத்திற்கு நடுவே அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த். குறிப்பாக தொடர்ந்து பிஜேபி தலைவர்களை சந்தித்து வருவது சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.

உத்திரபிரதேசம் ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், ஜார்கண்ட் ஆளுநராக இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்தயநாத் உள்ளிட்ட பலரையும் சந்தித்திருந்தார்.
தொடர்ந்து பாஜக தலைவர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் மீது தமிழகத்தில் பலரும் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். யோகி ஆதித்ய நாத்தின் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பலரும் ரஜினிகாந்தை கிண்டல் அடித்து மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.
காலா திரைப்படத்தில் வில்லனின் பேத்தி தனது காலில் வரும் பொழுது ரஜினி பேசும் அந்த வசனத்தை மேற்கோள் காட்டி பலரும் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.
20 வயதில் சிறியவர் காலில் போய் விழுகிறாரே இதையெல்லாம் பார்க்க சகிக்க முடியவில்லை. நல்லவேளை இவர் அரசியலுக்குள் வரவில்லை என்று மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.
நெட்டிசன்கள் போட்ட சில மீம்ஸ் இதோ.!