Categories: சமூகம்

வழிபாட்டு தளங்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

வழிபட்டு தலங்கள் மற்றும் மாதங்களில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு கட்டப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடா்பான பொது விவகாரங்கள் குறித்து விசாரித்த விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வழிபாட்டு தளங்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு! 1
சபரிமலை

கடந்த 2018ஆம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் வழிபட்டு உரிமை இருக்கிறது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த விவகாரம் கேரள ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற பார்ப்பனீய அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கலவரங்களுக்கும் ஏற்பட்டன.

மேலும், இந்துக்கள் தவிர மற்ற மதத்திலும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தால் ஆராயப்பட வேண்டிய பொதுவான விவகாரங்கள் குறித்து சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் சாா்பில் ஆஜராகும் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி உள்பட 4 மூத்த வழக்குரைஞா்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனா்.

மேலும், இதன் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்கு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்