
40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை. துவங்கியது முதல் இன்று வரை யாராலும், எந்த தோல்வியாலும் சோர்ந்து விடாமல் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். 70களில் இவருடன் அறிமுகமான பல நாயகர்கள் இப்பொது சினிமா துறையிலேயே இல்லாமல் போய்விட்டார்கள். இருப்பினும் இவர் இன்று ஆசிய அளவில் உற்றுநோக்கப்படும் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். 70வயதை தாண்டியும் இவர் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கிய “அண்ணாத்தே” திரைப்படம் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய போதிலும், மிக மோசமான விமர்சனத்தையே சந்தித்தது. இருப்பினும் ரஜினி என்ற ஒற்றை சொல்ல படம் அவ்வளவு பெரிய வசூலை ஈட்ட உதவியது. இதனை தன்னுடைய அடுத்த படத்தில் சரி செய்ய யோசித்து தொடர்ந்மது “கோலமாவு கோகிலா, டாக்டர்” என வெற்றி படங்களை கொடுத்து, விஜயுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு “பீஸ்ட்” திரைப்படத்தை இயக்கி வந்த நெல்சனுடன் கூட்டு சேர்ந்தார் ரஜினி. இந்த கூட்டணி விஜயின் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூலை வாரி குவித்தாலும், விமர்சன ரீதியாக மிக பெரிய ஏமாற்றத்தை பெற்றது. காமெடியை முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்து வந்த நெல்சன் இந்த படத்தில் காமெடி, விஜயின் மாஸ் இரண்டில் எதை சரியாக கையாளுவது என தெரியாமல் தோல்வியடைந்ததே படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது.
இதனால் அடுத்து இயக்க இருந்த தலைவர் 169 படத்திற்கு பல்வேறு வகையிலான எதிர்ப்புகைளை எதிர் கொண்டார் நெல்சன். ரஜினி நம்பிக்கை இல்லாமல் படத்தை ட்ரோப் செய்துவிட்டார் என்றும், நெல்சனே படத்தில் இருந்து விலகியதாகவும் பல்வேறு வகையிலான செய்திகள் தினமும் வந்து கொண்டே இருந்தன. தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் சார்பிலும் எந்தவித தெளிவும் அளிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் துபாய் சென்று இருந்த நெல்சன், படத்திற்கு ஷூட்டிங் லொகேஷன் பற்கே அங்கு சென்றதாகவும், ரஜினி கதையில் சில மாற்றங்கள் மட்டுமே கூறியதாகவும், மற்றபடி படம் விரைவில் துவங்கவும் எனவும் சிலர் கூறிவந்தனர். இதற்கிடையில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவா ராஜ்குமார் ஒரு பேட்டியில் நான் ரஜினியுடன் அடுத்த படத்தில் நடிப்பது உண்மையே, கதை மிகவும் நன்றாக இருந்தது, இதனால் படம் குறித்த நிகழ்வுகள் மீண்டும் தலைதூக்க துவங்கின.
எல்லா விஷயங்களுக்கும் முற்று புள்ளி வைத்து, நேற்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளது. இதனால் நெல்சன் இயக்க போவது 100% உறுதியாகியுள்ளது. தன்னுடைய முந்தைய படத்தில் செய்த தவறை இந்த படத்தில் சரி செய்து கொண்டு தான் மீது மிக பெரிய நம்பிக்கை வைத்துள்ள ரஜினிக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்க உழைத்து வருவதாகவும் நெல்சனின் நலம் விரும்பிகள் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பகிர்ந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த குதிரை விழும், சட்டென எழும், மீண்டும் வெற்றியை அடையும் என படத்திற்கும், படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் தலத்தில் பதிவிட்டுள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்த “மாநாடு” படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பதிவை வேறு ஒரு பாணியில் மாற்றி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “ஜெயிலர்” பட குழுவையும், ரஜினி மற்றும் நெல்சனை கலாய்த்து பதிவிட்டுள்ளதாக கூறி ஒரு செய்தி தளம் சுரேஷ் காமாட்சியின் அந்த பதிவை பகிர்ந்துள்ளது. சிறிது நேரத்தில் இந்த பதிவு மிகவும் வைரலானது.
இதனை பார்த்துள்ள சுரேஷ் காமாட்சி, “பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரிந்தால் பேசுங்க, ஒன்னுமே தெரியமா பேச வந்துடீங்க என” அந்த நிறுவனத்தை கலாய்த்து தன்னுடைய ட்விட்டர் தளத்தில் போஸ்ட் போட்டுள்ளார். இதுவு இப்பொது வைரலாகி வருகிறது