லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! வெளியான புதிய Update

வெளியிட்டது

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ‘ரெயின் ஆன் ஃபிலிம்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கியுள்ளார்கள். கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், சசி, லிங்குசாமி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இணைந்து திறமையான நடிகர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! வெளியான புதிய Update 1

நடிகைகளை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் இந்த நிறுவனம் முதல் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை லோகேஷ் கனகராஜ் இயக்க நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போது சூரியா ‘எதற்க்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கி வரும் ‘விக்ரம்’ படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைப்பெற்று வருகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்