Categories: சினிமா

“ரோலக்ஸ் – விக்ரம்”!! எனக்கு என்ன சொல்றதுனே தெரியல!! விக்ரம் குறித்து சூர்யாவின் ட்வீட்!!

வெளியிட்டது

கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அன்றேன் நடிப்பில் வெளியாகியுள்ள “விக்ரம்” படம் தான் இப்பொது திரையுலகிலும் போது மக்களிடமும் ஹாட் நியூஸ். இதுவரை பார்த்திராத ஒரு கமலை கண் முன் நிறுத்தி, சிறப்பான கதைக்களத்தில் நல்லதொரு படத்தை கொடுத்தள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதுவரை இல்லாத அளவுக்கு இப்படியொரு க்ரிப்பிங்காக கமல்ஹாசன் படம் வெளியனதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக உள்ளது. முதல் நாளிலேயே இந்தியாவில் 34 கோடி வரை விக்ரம் படம் வசூல் செய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் 20 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அமெரிக்கா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"ரோலக்ஸ் - விக்ரம்"!! எனக்கு என்ன சொல்றதுனே தெரியல!! விக்ரம் குறித்து சூர்யாவின் ட்வீட்!! 1

இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் இருந்தாலும், விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடி வாங்கியது. ஆனால், விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தான் இந்த படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக எதிர்பார்க்காத அளவுக்கு வசூல் வரவும் வாய்ப்புள்ளன.

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் பட்ஜெட் 110 கோடி என கூறப்படுகிறது. பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகமாக வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர்களின் சம்பளமே பாதி பட்ஜெட் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிரில்லியன்ட் ஸ்க்ரீன்பிளே தான் தியேட்டரில் ரசிகர்களை போனை நோண்ட விடாமல் பார்த்துக் கொண்டது.

விஜய்சேதுபதிக்கும் மேலே இருக்கும் நபராக சூர்யா வெறித்தனமான ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை சமூக வலைதளங்களில் சூர்யா ரசிகர்களே ஸ்பாய்லர்களாக நேற்றே ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து அவரது லுக் மற்றும் காட்சிகளை ரிவீல் செய்து விட்டனர். சூர்யாவின் என்ட்ரி தான் விக்ரம் 3ம் பாகத்திற்கான லீடாக அமைந்துள்ளது. 1986ல் வந்த விக்ரம் முதல் பாகம், இப்போ வந்திருக்கும் விக்ரம் 2ம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த பாகம் உருவாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். தற்போது தியேட்டரில் அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அன்புக்குரிய கமல்ஹாசன் அண்ணா.. எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு என் நன்றிகள் என பதிவிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்