நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருந்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.
தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலை முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா பல மொழிகளிலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, அண்மையில் நான் அஜித்குமாரை சந்தித்து இருந்தேன், அப்போது என்னிடம் பேசிய அவர், இப்போ புரியுதா நான் சிவாவை ஏன் விடாமல் பிடித்து வைத்து இருந்தேன் என பாராட்டி பேசினார் என சூர்யா பேட்டியில் தெரிவித்து உள்ளார்.