தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகமாகி இன்று பாலிவுட் வரை இவரது வெற்றிக்கொடியை நட்டியுள்ளார்.

ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தனக்கு உரித்தான பாணியில் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவை கலக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.
சிறு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது உச்சநாயகனாக உயர்ந்துள்ளதற்கு காரணம் என்றால் அது இவரின் கடின உழைப்பு என்றே சொல்லலாம்.
நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவை சிந்துபாத் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது சூர்யா இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.
அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. விஜய் சேதுபதி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சூர்யா தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். பிறந்தநாளை கொண்டாடி இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவரின் மனைவி மற்றும் மகள் கலந்துகொண்டு உள்ளனர். ரசிகர்கள் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.