நந்தா, பிதாமகன் என்ற இரு வெற்றிப்படங்களை நடிகர் சூர்யாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் பாலா. உண்மையில் நடிகர் சூர்யாவின் திரையுலக பயணத்தில் இந்த இரண்டு படங்களும் மிக முக்கியமானவை ஆகும். அண்மையில் 18 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி மறுபடியும் இணைய உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகின.

நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவும் இணையும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகினார். இசைமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பு சில வாரங்கள் முன்பு துவங்கி கன்னியாகுமரியில் நடைபெற்று முடிந்தது.
ஆனால் சில நாட்களாக நடிகர் சூர்யாவிற்கு இயக்குனர் பாலாவிற்கு படப்பிடின் போது சில மனகசப்புகள் உருவாகியது, இதனால் நடிகர் சூர்யா யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பிலிருந்து சென்னை வந்துவிட்டார் எனவும், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகின.
இருதரப்பும் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், படம் கைவிடப்பட்டது, படம் நிறுத்தப்பட்டுவிட்டது எனவும் பல்வேறாக செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிர்வாகி படம் குறித்து உண்மை நிலவரத்தை இப்பொது கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுக்கும் இயக்குனர் பாலா முதல்க்கட்ட படப்பிடிப்பில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளதாகவும், சில காட்சிகளை இயக்குனர் மீண்டும் மீண்டும் சரியாக பார்த்து பார்த்து எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பாலா மீண்டும் சில காட்சிகளை மாற்றி எழுதி படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாகவும், படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை, சில நாட்களில் மீண்டும் துவங்கும் என புரளிகளை நம்ப வேண்டாம் என தெளிவு படுத்தி இருந்தனர். இந்நிலையில் அப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் துவங்கப்படவுள்ளதாக சில நாட்கள் முன்பே செய்திகள் வெளியாகின.
வருகிற ஜூலை 22ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள். அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தி தலைப்பை வெளியிடலாம் என முடிவில் இருப்பதாக தெரிகிறது. படத்தில் நடிகர் சூர்யா மீனவ கிராமத்து இளைஞனாக நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் கிடைத்தன. இந்நிலையில் மற்றொரு அப்டேட்டாக சூர்யா படத்தில்மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என்றும் சில நாட்கள் முன் செய்திகள் கிடைக்கப்பெற்றன. படத்திற்கு “வணங்கான்” என்கின்ற டைட்டிலை வைக்க இயக்குனர் பாலா உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ‘கடலாடி’ என்கின்ற மற்றொரு டைட்டிலும் சிபாரிசில் இருக்கிறதாம்.
இப்பொது இந்த தலைப்புகள் இணையத்தில் கசிந்துள்ளதால் இயக்குனர் பாலா மிகவும் கடுப்பாக உள்ளாராம். ரகசியமாக வைக்கவேண்டும் என இருந்த இருந்த தலைப்பு எவ்வாறு கசிந்தது என்ற குழப்பத்திலும் அவர் உள்ளாராம். இந்நிலையில் ஜூலை 22ஆம் தினமே வாடிவாசல் படமும் அப்டேட் கொடுக்க தயாராகி வருவதாக தெரிகிறது.