சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து இயக்கி வரும் படமான சூர்யா 42 புதிய படத்திற்கு கங்குவா என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. அதை ஒரு டீசருடன் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் பிரபல நடிகராக இருந்த சிவக்குமாரின் மூத்த மகன் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார், ஃபிரண்ட்ஸ், நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், அயன், சிங்கம், ஏழாம் அறிவு, தானா சேர்ந்த கூட்டம், காப்பான், சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் விக்ரம் படம் மற்றும் நம்பி விளைவு ஆகிய இரண்டு படங்களில் கெஸ்ட் ரோலாக நடித்திருந்தார். தற்போது தனது 42 வது படமான கங்குவா படத்திலும், சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சூர்யா நடிக்கும் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை தற்காலிகமாக சூர்யா 42 என்று அழைத்து வந்தனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலமாக இவர் தமிழ்த் திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா படத்திற்கு பின்னர் தேவி ஸ்ரீ கிருஷ்ணா இசையமைக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் K.E. ஞானவேல்ராஜாவும், யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படம் சரித்திர கதை அம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 3d தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி வருவதாகவும், இந்தியா முழுவதும் பத்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டீசர் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. படத்திற்கு “கங்குவா” என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய டீசருடன் இந்த படத்தின் பெயரை அறிவித்து இருக்கிறது படக்குழு. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Saregama Tamil