Categories: சினிமா

தோள்பட்டையில் ஏற்பட்ட பயங்கர காயம்.! நடக்க முடியாமல் நடந்து செல்லும் சூர்யா.! வைரலாகும் வீடியோ.!

வெளியிட்டது

‘கங்குவா’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஷூட்டிகிலிருந்து சில காலம் விலகி ஓய்வெடுப்பதற்காக மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சூர்யா செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. சரியாக நடக்க முடியாமல் தனது மனைவியுடன் அவர் மெதுவாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம்தான் ‘கங்குவா’. வரலாற்று கதையம்சத்துடன் பேண்டஸியை கலந்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யா பல கெட்டப்புகளில் நடித்து வருவதாகவும், சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தோள்பட்டையில் ஏற்பட்ட பயங்கர காயம்.! நடக்க முடியாமல் நடந்து செல்லும் சூர்யா.! வைரலாகும் வீடியோ.! 1
மேலும் இந்த படத்தில் நடிகை திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகி பாபு, ஜெகபதிபாபு, ரெட்டிங் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் பிவிஆர் ஃபிலிம் சிட்டியில் சமீப காலமாக நடந்து வந்தது. இதில் சூர்யாவின் சண்டைக் காட்சிகளுக்காக பிரத்தியேக செட் அமைத்திருந்தனர். சில தினங்களுக்கு முன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவின் தோள்பட்டையில் பலத்த காயின் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் சூர்யா அனுமதிக்கப்பட்டிருந்தார். தோள் பட்டையில் வீக்கம் மற்றும் காயம் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் சூர்யாவிற்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த நடிகர் சூர்யா, “தான் நன்றாக இருப்பதாகவும், சில தினங்களில் மீண்டும் ஷூட்டிங் திரும்ப இருப்பதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மேலும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும் இரண்டு வாரங்கள் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதால் அவர் ஜோதிகாவுடன் சென்னையில் இருந்து மும்பை செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் சரியாக நடக்க முடியாமல் மெதுவாக நடந்து செல்லும் காட்சியை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து விரைவில் அவர் குணமடைந்து வரவேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்