நடிகை ஜோதிகா தனது மகள் தியாவுக்காக நாய் குட்டி ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் 1998 ம் ஆண்டு ஹிந்தி படம் ஒன்றில் நடித்தார். தொடர்ந்து 1999ம் ஆண்டு ‘வாலி’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

பின்னர் அடுத்த ஆண்டு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சிநேகிதியே’, ‘முகவரி’, ‘குஷி’, ‘ரிதம்’ என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
அதன் பின்னர் இவர் ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘லிட்டில் ஜான்’, ‘பிரியமான தோழி’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மன்மதன்’, ‘சில்லுனு ஒரு காதல்’, ‘சந்திரமுகி’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற பல படங்களின் நடித்து முடித்திருக்கிறார். 2007ம் ஆண்டு ‘மொழி’ படத்திற்கு பின்னர் அவர் நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டார்.
பின்னர் 2015ம் ஆண்டு ’36 வயதினிலே’ என்கிற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்தன் மூலம் திரைத்துறைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நடித்து வருகிறார் ஜோதிகா.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ராட்சசி’. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குப் பின்னர் இவர் ‘உடன்பிறப்பே’ என்கிற படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடித்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜோதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவர் சூர்யாவை கடந்த 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு தனது மகளுக்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி பரிசளித்து இருந்தார் ஜோதிகா. தற்போது அந்த குட்டி வளர்ந்து ஒரு வயதை எட்டி இருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார் ஜோதிகா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. லைக்குகளும் குவிந்து வருகிறது.