Categories: சினிமா

என் புள்ளைங்களை போட்டோ எடுக்காதீங்க.! செம்ம அப்செட் ஆன சூர்யா.! கேமராவில் கை வைத்து மறைப்பு..!

வெளியிட்டது

எங்கள எவ்வளவு போட்டோ வேணும்னாலும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் குழந்தைகளை புகைப்படம் எடுக்காதீர்கள் என்று நடிகர் சூர்யா கேமரா மீது கை வைத்து மறைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் உலகில் மிகப்பெரிய கலைஞர்களாக இருப்பவர்கள் ஜோதிகா மற்றும் சூர்யா தம்பதி. இவர்கள் குடும்பமே கலைக்குடும்பம். அதனால் இவர்கள் எங்கு சென்றாலும் சூழ்ந்து கொண்டு புகைப்படம் வீடியோக்கள் எடுப்பது வழக்கம்.பொதுவாகவே திரைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுவது வழக்கம்தான். ஆனாலும் அவர்கள் தங்கள் குடும்பத்தை பொதுவெளியில் காட்டுவதற்கு தயங்குவார்கள். ஏனெனில் பொதுவெளியில் அவர்கள் வந்து போகும்பொழுது அவர்களையும் அடிக்கடி சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் அன்பு தொல்லை கொடுக்க நேரிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. அதனால் தங்கள் குடும்பத்தாரின் தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கும் என்று பலர் தங்கள் குடும்பத்தை வெளியில் காட்டுவதே இல்லை. தற்போது சூர்யாவும் தனது மகள் மற்றும் மகனின் புகைப்படங்களை வெளியில் காட்ட வேண்டாம் என்று பத்திரிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

என் புள்ளைங்களை போட்டோ எடுக்காதீங்க.! செம்ம அப்செட் ஆன சூர்யா.! கேமராவில் கை வைத்து மறைப்பு..! 1

நேற்று இரவு மும்பையில் ஒரு ஹோட்டலுக்கு வந்த ஜோதிகா, சூர்யா அவரது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோர் காரில் ஏற முற்பட்டனர். அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் அவர்களை வீடியோ மற்றும் போட்டோ எடுக்க முயன்றனர். இதை பார்த்த சூர்யா என்னையும் ஜோதிகாவையும் எவ்வளவு வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தேவ் மற்றும் தியாவை எடுக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். ஆனாலும் விடாமல் புகைப்படக் கலைஞர்கள் பின் தொடர்ந்து சென்றனர். மேலும் சூர்யா ஜோதிகா இருவரும் ஒன்றாக நின்று ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர். இருந்தபோதிலும் விடாமல் காரில் ஏற முயன்ற சூர்யாவின் மகள் மற்றும் மகனை வீடியோ எடுக்க முற்பட்டனர். அப்போது நாங்கள்தான் ஒத்துழைப்பு தருகிறோமே என் மகன் மற்றும் மகளை எடுக்காதீர்கள் என்று கூறி சூர்யா கேமரா மீது கை வைத்து மறைக்க முயன்றார்.

மேலும் அவர் கூறும் பொழுது தனது குழந்தைகளுக்கு என ஒரு தனி உலகம் இருக்கிறது, அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் நாங்கள் தான் உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறோமே யூ கேன் ஹவ் மை ஃபோட்டோஸ் டோன்ட் ரெக்கார்டு மை கிட்ஸ் என்று ஆங்கிலத்தில் அவர் கூறிவிட்டு சென்றார். தனது குழந்தைகளை பொதுவெளியில் காட்டும் பொழுது அவர்கள் வெளியில் எங்காவது சென்றால் அவர்களையும் மக்கள. சூழ்ந்து கொண்டு அவர்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு சூர்யா இவ்வாறு செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: cars for you

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்