Categories: உலகம்

ஏமன் நாட்டில் பரவி வரும் பன்றி காய்ச்சல்! இதுவா 8 பேர் பலி!!

வெளியிட்டது
ஏமன் நாட்டில் பரவி வரும் பன்றி காய்ச்சல்! இதுவா 8 பேர் பலி!! 1

ஏமனில், 2015ம் ஆண்டு அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட அப்திராபவ் மன்சூர் ஹாடி அரசாங்கம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்த நிலையிலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசை எதிர்த்து மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், ஏமன் நாட்டில் சுகாதார பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பில்லா நிலை மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டு அதனால் வியாதிகள் பரவி வருகிறது என்று அந்த நாட்டின் சுகாதார அறிக்கை தெரிவி்த்துள்ளது.

ஏமனில் வடக்கு பகுதியான ஷியா ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு பருவகால காய்ச்சல் பாதிப்பிற்கு 1,600 பேர் பாதிப்படைந்து உள்ளனர். அவர்களில் 48 பேர் பலியாகி உள்ளனர்.

பலியானார்களில் 8 பேர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்று ஹவுதி சுகாதார மந்திரி தஹா தெரிவித்து இருக்கிறார். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பன்றி காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்