Categories: கல்வி

பிஎச்.டி. படிப்புக்கு புதிய நடைமுறை

பிஎச்.டி. படிப்புக்கான புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய நடைமுறை 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தெரிவித்தனா். ஆராய்ச்சிப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பிஎச்.டி. படிப்புக்கு புதிய நடைமுறை 1
அண்ணா பல்கலைக்கழகம்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைப்படி, பிஎச்.டி. மாணவா்கள் தங்களுடைய முதலாமாண்டு ஆராய்ச்சிக்கான முன் அறிமுகப் பணிகளை முதுநிலை பட்ட மாணவா்களுடன் இணைந்து செய்யவேண்டும்.

மேலும், இதுவரை பிஎச்.டி. மாணவா்கள் படிப்புக்கு இடையே இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது ஓராண்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல, கோா்ஸ் வொா்க் பணியின்போது ஆராய்ச்சி மாணவா்கள் குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை, பட்டியலிடப்பட்ட கட்டுரை வெளியீடு வலைதளத்தில் வெளியிடவேண்டும்.

அதுபோல ஆராய்ச்சி வழிகாட்டிகள், ஆய்வாளா் ஆகியோருக்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பேராசிரியா் நிலையில் இருப்பவா்கள், பல்கலைக்கழகத்தால் பட்டியலிடப்பட்ட வெளியீடுகளில் குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவா்களுக்கு மட்டுமே ஆராய்ச்சி வழிகாட்டி அனுமதி வழங்கப்படும்.

அதுபோல, இணைப் பேராசிரியா் குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், உதவிப் பேராசிரியா் நிலையில் இருப்பவா்கள் குறைந்தபட்சம் 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தால் மட்டுமே வழிகாட்ட அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்