தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் நடிகர் டி.ராஜேந்தர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனநர் என பல்வேறு பரிணாமங்களில் தன் திறமையை காட்டியவர். இன்று முண்ணனி நடிகர்களின் படங்கள் எப்படி ஹவுஸ் ஃபுல் ஆகி ஓடுகிறதோ, அது போல ஒரு காலத்தில் டி.ராஜேந்தர் அவர்களின் படங்களுக்கு டிக்கெட் வாங்குவதற்கு முண்டி அடித்த காலங்களும் உண்டு. அது மட்டுமில்லாமல் அரசியல்வாதியாக ஒரு கலக்கு கலக்கியவர். தனது அடுக்கு மொழி வசனத்தால் இன்றைக்கும் பேசி பலரை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவருடைய மூத்த மகன் சிம்பு என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. தன் படங்களில் சிம்புவையும் நடிக்க வைத்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக வளர்த்துவிட்டவர் ராஜேந்தர். இன்றளவும் கூட சிம்புவின் படங்களுக்கு பிரச்சினை வரும் போது முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பவர் ராஜேந்தர் தான். தற்போது டி.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை குறித்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக உள்ளது. இவர் கடந்த நான்கு நாட்களாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. Youtube Video Code Embed Credits: Behindwoods Tv
மிகவும் மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மேல் சிகிச்சைக்காக சிம்பு அவரை சிங்கப்பூர் அழைத்து செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ திரைத் துறையில் மாபெரும் பங்காற்றிய அந்த கலைஞன் விரைந்து உடல்நலம் பெற நாமும் பிராத்திப்போம்.. Watch the below video