Categories: சினிமா

மணப்பெண் ஆனார் நடிகை தமன்னா.! விரைவில் டும் டும் டும்.! மாப்பிள்ளை யாருனு தெரியுமா?

வெளியிட்டது

தமன்னாவுக்கு திருமணம் நடைபெற உள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற பல மொழிகளில் நடித்து முடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2005ம் ஆண்டு வெளியான சந்த் சா ரோஷன் செகரா என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தர். பின்னர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தில் திமிர் பிடித்த பெண்ணாக, அரசியல்வாதியின் தங்கையாக இவர் நடித்திருப்பார். பின்னர் தனுஷுடன் இணைந்து படிக்காதவன் படத்தில் நடித்தார். அதன் பின்பு இவரின் செல்வாக்கு உயர்ந்தது.

மணப்பெண் ஆனார் நடிகை தமன்னா.! விரைவில் டும் டும் டும்.! மாப்பிள்ளை யாருனு தெரியுமா? 1

குறுகிய காலத்திலேயே முண்ணனி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். குறிப்பாக சூர்யாவுடன் இவர் நடித்த அயன் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து விஜயுடன் சுறா, அஜீத்துடன் வீரம் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருப்பார். கண்டேன் காதலை, பையா போன்ற படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார். பின்னர் இவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு பாகுபலி. இந்த படத்தில் மகன் பிரபாஸுக்கு ஜோடியாக போராளியாக நடித்து இருப்பார் தமன்னா. இது மட்டுமில்லாமல் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்போது தமன்னாவுக்கு திருமணம் நடைபெற உள்ள செய்தி வெளியாகியுள்ளது.

மும்பையில் உள்ள தொழிலதிபர் ஒருவருடன் தமன்னாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. எப்போதும் திருமண செய்தியை உடனே மறுக்கும் தமன்னா இந்த முறை அவர் இந்த செய்தியை மறுக்கவில்லை. இதனால் தமன்னாவுக்கு மும்பை தொழிலதிபருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது. இதை தமன்னாவே விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்