அறிவிப்பு வந்தது முதலே பல்வேறு எதிர்பார்ப்புகளும், விமர்சனங்களும் மத்தியில் தான் நடிகர் அருள்சரவணன் நடித்துள்ள “தி லெஜெண்ட்” படம் உருவானது. விளம்பர படத்தில் முதல் முறை தோன்றிய அவரை பல்வேறு வகையிலான கேலி கிண்டலுக்கு உள்ளாக்க, மீண்டும் மீண்டும் பல விளம்பரங்கள் நடித்தார். பின்னர் திடீரென அண்ணாச்சி சினிமாவில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வந்தது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தை பல்வேறு இடங்களில் தங்களுடைய ஜவுளி கடையை மிகவும் வெற்றிகரமா நடத்தி வரும் குடுமபம் சரவணா ஸ்டோரிஸ் குடும்பம். சென்னை டி.நகரில் ஒரு கடையில் துவங்கிய இவர்களுடைய கடை இப்பொது தமிழகம் எங்கும் பறந்து விரிந்துள்ளன. ஜவுளி கடைகள் மட்டுமின்றி மனிதனின் அத்தியாவசிய தேவை பொருள்கள் அனைத்துமே இவர்கள் கொண்டுள்ளனர். அதனை குடுமபத்தின் ஒரு வாரிசான அருள் சரவணன் இப்பொது சினிமாவிலும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார்.
ஒரே படம். பாலிவுட் நாயகி, சிறந்த இசையமைப்பாளர், மிக பெரிய நட்சத்திரங்கள், சிறந்த மேக்கிங் என எல்லா வகையிலும் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிக பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஆடியோ லாஞ்ச் மக்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக 10 நாயகிகளுடன் மேடையில் தோன்றிய சரவணன், “நான் எப்போதுமே சிங்கள் ஹீரோ தான்” என பேசியதும், “ரஜினி, விஜய் தான் என்னுடைய ரோல்மாடல்” என்றதும் பெரிய அளவில் பேசப்பட்டது. வெளியான ட்ரைலர் சரவணனை கலாய்க்க உதவினாலும், பலரும் படத்தின் மேக்கிங்கை பாராட்டினார்கள்.
படத்தின் வெளியீடு வருகிற ஜூலை 28ஆம் தேதி என்பதால் இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அண்ணாச்சி படத்திற்கான ப்ரோமோஷன் வேளைகளில் இறங்கியுள்ளார். தங்கள் விளம்பரங்களில் முன்னர் நடித்துள்ள பிரபல நாயகி தமன்னாவை இப்பொது உபயோகப்படுத்த முடிவு எடுத்து படம் குறித்து பேச வைத்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.