
சென்னை தலைமை செயலகத்தில் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றில் பல முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.