மருதாணியில் கூட உன் முகம் தான் இருக்கனும்.! கணவருக்காக ரித்திகா செய்த செயல்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆலியா மானசா சஞ்சீவ் நடித்த ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரித்திகா. கோயம்புத்தூரை சேர்ந்த ரித்திகாவின் இயற் பெயர் தமிழ்செல்வி. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக சில குறும்படங்களில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் இவர் ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பின்னர் இவருக்கு பெரிய அளவில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்த அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தார் ரித்திகா.

மருதாணியில் கூட உன் முகம் தான் இருக்கனும்.! கணவருக்காக ரித்திகா செய்த செயல்.! 1

வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த போதும் இவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். பிறகு இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த சீரியலில் அம்ருதா என்னும் கதாபாத்திரத்தில் இவர் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது இவருக்கு ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவியில் வேலை செய்யும் ஒருவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவர் உடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இவர்களின் இருவரின் திருமணம் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிமையாக நடைபெற்றது. இருவருக்கும் திருமண வரவேற்பு விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

திருமணம் முடிந்த பிறகு முதல் முறையாக தனது கணவருடன் கேரளா புடவையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு திருமணத்திற்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது அவர் திருமண வரவேற்புக்கு தயார் ஆகி வருகிறார். அதற்காக அவர் மெஹந்தி போடும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனது கணவர் வினு பெயரையும், அவரது முகத்தையும் வரைந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்