தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகை நளினிக்கு நடந்த சம்பவம்.! அதிர்ச்சியில் உறைந்து போன நளினி.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு நடிகை நளினி சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார். அவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடத்திருக்கிறது. அதை நினைத்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் நளினி. அந்த ப்ரோமோவை தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகை நளினிக்கு நடந்த சம்பவம்.! அதிர்ச்சியில் உறைந்து போன நளினி.! 1

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. தனது தெய்வீகமான முகத்தால் பல பக்தி பாடல்களிலும், பக்தி படங்களிலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். இவர் நடித்த கோலங்கள் நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வில்லியாக நடித்து அசத்தியிருந்தார் நளினி.


2000 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ண தாசியில் தொடங்கி பின்னர் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா என்கிற இவர் நடித்த காமெடி சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் என்கிற தொடரிலும், ஜீ தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரிலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நளினி. ராமராஜனுடன் இவருக்கு 1987 ஆம் ஆண்டு திருமணமானது. பின்னர் அருணா மற்றும் அருண் என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. பின்னர் நளினி ராமராஜனை 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.

la
இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு அவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். அப்போது இந்த வாரம் ஜோசியத்தை நம்புபவர்கள் வெர்சஸ் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்று இரு தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரு ஜோதிடர் பிறந்த தேதியை வைத்து நளினி பற்றி புட்டு புட்டு வைக்க அதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் நளினி.

மேலும் நடுவர் ஆவுடையப்பன் ஜோதிடர் கூறிய அனைத்தும் உண்மையா என்று நளினியிடம் கேட்க, ஆம் இது அனைத்தும் உண்மைதான் என்று பதில் அளிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது..! நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்