பிற்போக்கு தனமாக பேசிக் கொண்டிருந்த ஜோசியர்கள்.! வெளுத்து வாங்கிய எதிர்நீச்சல் மாரிமுத்து.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா என்கிற விவாத நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவில் ஜோதிடர் சொல்லும் பரிகாரங்களும் அதை கேள்வி எழுப்பும் பொதுமக்களும் என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஜோதிடர்களை அமர வைத்தும், மறுபுறம் அவர்களுக்கு எதிராக கேள்வி எழுப்பும் பொது மக்களை அமர வைத்தும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது் இதில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் மாரிமுத்து கலந்து கொண்டிருக்கிறார். அவர் ஜோதிடர்களை சரமாரியாக கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஜோதிடர்கள் திணறுகின்றனர். மேலும் வார்த்தை மோதல் ஏற்பட்டு இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிற்போக்கு தனமாக பேசிக் கொண்டிருந்த ஜோசியர்கள்.! வெளுத்து வாங்கிய எதிர்நீச்சல் மாரிமுத்து.! 1
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த ஆணாதிக்கம் கொண்ட ஒரு நபராக நடித்துக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து. ஆதி குணசேகரன் என்கிற இவரது கதாபாத்திரம் பலரது வெறுப்பை சம்பாதித்திருக்கும் கதாபாத்திரமாக இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் மாரிமுத்துவிற்கு பிற்போக்குத்தனங்கள் என்றால் பிடிக்காது. அவர் பலபேட்டிகளில் தான் ஒரு சிறந்த முற்போக்குவாதி என்று பேசி வருகிறார். மேலும் ஜோதிடத்தையும் ஜோசியத்தையும் நம்பாத ஆள், ஜாதகத்தை அக்குளில் வைத்துக்கொண்டு பலர் சுற்றும் நிலையில் தான் அவ்வாறு சுற்றுவதில்லை தான் ஒரு முற்போக்குவாதி என்று ஒரு பேட்டியில் காரசாரமாக விவாதித்து இருந்தார் மாரிமுத்து. இந்த நிலையில் இன்று தமிழா தமிழா நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் ஜோதிடர்கள் சந்திராஷ்டமம் ஒன்று நம் புகைப்படத்தை செல்பி எடுத்து டெலிட் செய்து விட்டால் அன்றைய நாள் நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து கடுப்பான மாரிமுத்து உங்களை எல்லாம் பார்த்து சிரிப்பு வருகிறது, கோபம் வரும் நேரத்தில் சிரிப்பும் கூடவே வருகிறது, இப்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல்வரே ஆக முடியாது என்று பலர் கூறினர், ஆனால் அவர் முதல்வராகிவிட்டார், அதை போல் கொரோனா வரும் என்று எந்த ஜோசியனும் சொல்லவில்லை, வெள்ளம் வரும் என்று எந்த ஜோசியனும் சொல்லவில்லை வந்த பிறகு சொல்லுவார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது கடுப்பான ஜோசியர் நீங்கள் சொல்வது மட்டும் உண்மை என்றால் நான் 2 கோடி சொத்தை உங்கள் பெயருக்கு எழுதி தருகிறேன் என்று கூற, விவாதம் காரசாரமானது. அந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்