தனக்காக நல்ல காபி செய்து கொடுத்த கடை ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்ட தமன்னாவின் செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி போன்ற பல மொழிகளில் நடித்து முடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2005ம் ஆண்டு வெளியான சந்த் சா ரோஷன் செகரா என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தர். பின்னர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தில் திமிர் பிடித்த பெண்ணாக, அரசியல்வாதியின் தங்கையாக இவர் நடித்திருப்பார். பின்னர் தனுஷுடன் இணைந்து படிக்காதவன் படத்தில் நடித்தார். அதன் பின்பு இவரின் செல்வாக்கு உயர்ந்தது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

குறுகிய காலத்திலேயே முண்ணனி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். குறிப்பாக சூர்யாவுடன் இவர் நடித்த அயன் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து விஜயுடன் சுறா, அஜீத்துடன் வீரம் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருப்பார். கண்டேன் காதலை, பையா போன்ற படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார். பின்னர் இவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு பாகுபலி. இந்த படத்தில் மகன் பிரபாஸுக்கு ஜோடியாக போராளியாக நடித்து இருப்பார் தமன்னா. இது மட்டுமில்லாமல் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும் அடுத்தபடியாக ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது தமன்னாவின் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. காபி பிரியையான தமன்னா அடிக்கடி ஸ்டார்பக்ஸ் என்ற கடையில் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் அடிக்கடி சென்று காபி கடையில் எடுக்கும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அது போல இன்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் காபி மிக நன்றாக இருந்ததால், கடை ஊழியர்களை அழைத்து தன் கையாலேயே கேக் ஊட்டி விடுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: CineWoods