Categories: சமூகம்

போதை மறுவாழ்வு மையங்களில் கட்டமைப்பை மேம்படுத்தவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவு!!

வெளியிட்டது
போதை மறுவாழ்வு மையங்களில் கட்டமைப்பை மேம்படுத்தவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவு!! 1

டாஸ்மாக் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட், மாநிலம் முழுவதும் இயங்கி வரும் போதை மறுவாழ்வு மையங்களின் உள்கட்டமைப்பை சீர் செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்காக ரூ.3.65 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒதுக்கப்பட்ட பணம் கட்டில்கள், உபகரணங்கள் வாங்குவதற்கும் புதிய வார்டுகளை நிர்மாணிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில், போதை மறுவாழ்வு மையங்கள் பொதுவாக அரசு மருத்துவமனைகளுக்குள் ஒரு வார்டில் அமைந்துள்ளன. இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், மனநல மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களை போன்ற பணியாளர்களை வலுப்படுத்துவதையும் நாங்கள் பார்க்கிறோம். அங்கு வரும் மக்கள் ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்துவதற்கு விரும்புகிறோம் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். இது தொடர்பான அரசாங்க உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மதுபான சந்தையை கண்காணிக்கும் ஆய்வாளர்கள், டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தினமும் சுமார் 70 லட்சம் பேர் மது அருந்துகிறார்கள் என்று மதிப்பிடுகின்றனர். மாநிலத்தில் 5,152 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 1,872 பார்கள் உள்ளன. 2018-19ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் அரசாங்கம் ரூ. 31,157 கோடி வருமானத்தை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்