தேயிலை ஏற்றுமதி சரிவு

கடந்த 2019ஆம் ஆண்டில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை ஏற்றுமதி சரிவு 1
தேயிலை தோட்டம்

கடந்த ஆண்டில் 25.60 கோடி கிலோவாக இருந்த நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2019ஆம் ஆண்டு 24.83 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இதனால் நடப்பாண்டில் தேயிலை ஏற்றுமதியானது 3 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

தேயிலை ஏற்றுமதி குறைந்திருந்தாலும், மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி 2018ஆம் ஆண்டினை காட்டிலும் ரூ.275 கோடி அதிகரித்து ரூ.5,610.65 கோடியாக கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகமாக தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளில் காமல்வெல்த் நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி கடந்தாண்டில் முந்தைய 2018 உடன் ஒப்பிடுகையில் 6.30 கோடி கிலோவிலிருந்து சரிந்து 5.91 கோடி கிலோவானது. இது, ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று, பிரிட்டனுக்கான தேயிலை ஏற்றுமதியும் 1.57 கோடி கிலோவிலிருந்து 1.17 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதியும் 1.58 கோடி கிலோவிலிருந்து சரிந்து 62.30 லட்சம் கிலோவானது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்