Categories: சமூகம்

உத்தர பிரதேச மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர்! கடும் தாக்குதல் நடத்திய மாணவர்கள்!!

வெளியிட்டது
உத்தர பிரதேச மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர்! கடும் தாக்குதல் நடத்திய மாணவர்கள்!! 1

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பல்கரான்பூர் பகுதியில் ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடைபெற்றது. இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் அவர்களை திட்டி இருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், பாதுகாவலர்களை அழைத்து கொண்டு சென்று ஆசிரியர் மீது தாக்குதலில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சம்பவத்தில் கட்டைகளை கொண்டு அடித்ததில் ஆசிரியர் தரையில் விழுந்து உள்ளார். அதன் பின்னர் அந்த கும்பல் தாக்குதலை தொடர்ந்து நடத்தி உள்ளது.

இதுபற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் பற்றி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம் என்று செய்தியாளர்களிடம் பிரயாக்ராஜ் எஸ்.பி.யான என்.கே. சிங் கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்