தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன். புதிய பாதை என்ற படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் இவர். இப்படத்தை தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சினிமாவில் உருவாக்கி கொண்டு உள்ளார். தற்போது தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்து உள்ளார் பார்த்திபன்.

இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. அதுபோல இவர் ஒரே ஷாட்டில் இயக்கி வெளியிட்ட இரவின் நிழல் படம் பல்வேறு விருதுகளை வழங்கி குவித்து இருக்கிறது. தற்போது சிறு குழந்தைகளை வைத்து டீன்ஸ் என்ற படத்தினை இயக்கி உள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
இந்தியன் 2 உடன் போட்டியிட்டு வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்தியன் 2 வரவேற்பினை பெறாததால் அனைவரது கவனமும் டீன்ஸ் படத்தின் பக்கம் திரும்பியது. இப்படத்தின் வெற்றியை நடிகர் பார்த்திபன் படக்குழுவினர் உடன் இணைந்து கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.