Categories: சினிமா

பெற்றோர்கள் பேச்சை கேட்கலாமல் பேய் கிராமத்தில் மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள்.! ‘டீன்ஸ்’ ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

இயக்குனர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் குழந்தைகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் உலகின் நடிகராகவும், முன்னணி இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர்.பார்த்திபன். ‘இரவின் நிழல்’ படத்திற்குப் பின்னர் தற்போது இவர் ‘டீன்ஸ்’ என்கிற பேய் படத்தை இயக்கியிருக்கிறார். பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் யோகி பாபு மற்றும் குழந்தைகளை மட்டுமே மையமாக வைத்து திரில்லர் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் பேச்சை கேட்கலாமல் பேய் கிராமத்தில் மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள்.! 'டீன்ஸ்' ட்ரைலர் இதோ.! 1

இந்தப் படத்தை பயாஸ்கோப் usa மற்றும் அகிரா ப்ரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், தற்போது படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ட்ரைலரை பார்க்கும் பொழுது பழைய கிணற்றில் இருக்கும் பேய் பற்றி ஒரு சிறுமி கதை சொல்வது போல தொடங்குகிறது. திகிலான காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளது.

பார்த்திபன் என்றாலே ஏதாவது வித்தியாசமான கதையம்சத்துடன் படம் எடுப்பவர். எனவே இந்த படமும் அப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் காட்டுக்குள் செல்லும் சிறுவர்கள் குழு அங்கு மாட்டிக்கொள்வதை போல ட்ரைலர் அமைந்துள்ளது. நீங்களும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Parthiban Radhakrishnan

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்