Categories: சினிமா

குழந்தை பிறக்கும் தேதி சொல்லட்டுமா! நெட்டிஸன்களிடம் சமந்தா காட்டாமன பதில்!!

வெளியிட்டது
குழந்தை பிறக்கும் தேதி சொல்லட்டுமா! நெட்டிஸன்களிடம் சமந்தா காட்டாமன பதில்!! 1

தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமந்தா, இவர் தற்போது டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் ஹீரோயினாக நடிப்பை தொடர்ந்து வருகிறார். ஆனால் திருமணமாகி 2 வருடம் ஆகியும் அவர் குழந்தை பெற்றுக்கொள்ளாமலிருப்பது பற்றி அவரிடம் கேட்ட வண்ணமிருந்தனர். பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தநிலையில் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டு வந்தார்.

இந்த வருடம் குழந்தை பெற்றுக்கொள்வார் என்ற தகவல்கள் பரவிய நிலையில் அவரோ கைநிறைய படங்களும், வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதில் ரசிகர்கள் அப்செட் ஆகினர். சமந்தாவை வம்பிழுத்த சில நெட்டிஸன்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

நேரம் வரும்போது சொல்கிறேன் என்று பலமுறை பதில் அளித்து இருக்கிறார். ஆனால் அவரை யாரும் விட்ட பாடில்லை. தினமும் இதுபோன்று கேள்வி கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது கொண்டே இருந்தது. இதில் கோபம் அடைந்தார் சமந்தா. இதுபற்றி சமந்தா கூறும்போது,’ ‘ குழந்தைதானே… 2022 ஆகஸ்ட் 7ம்தேதி 7 மணிக்கு பெற்றுக்கொள்வேன் போதுமா’ என கடு கடு பதில் அளித்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்