நான் என்ன கொலைகாரனா? கொள்ளை காரனா? ரசிகர்களை செல்லமாக கலாய்த்த தல

வெளியிட்டது

பைக்கில் லடாக்கில் சாகச பயணம் மேற்கொண்டு இருக்கும் தல அஜித்தை தொடர்ந்து வந்த ரசிகர்களை பார்த்து கிண்டலாக என் நான் என்ன கொலைக்காரனா இல்லை கொள்ளைக்காரனா என்று கலாய்த்திருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் தல அஜித் குமார். இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் .அஜித்தை பொருத்தவரை பொதுவெளியில் எங்கும் அதிகமாக கலந்து கொள்ள மாட்டார். அவருடைய படத்தின் ப்ரோமோஷனுக்கே அவர் அதிகமாக வருவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் டூர் செல்வது, பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல சாகசங்களில் அஜித் ஈடுபடுவது வழக்கம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நான் என்ன கொலைகாரனா? கொள்ளை காரனா? ரசிகர்களை செல்லமாக கலாய்த்த தல 1

தற்போது ஏகே 61 பட ஷூட்டிங்கில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு லடாக் காஷ்மீர் பகுதிகளில் பைக் ரெய்டில் சாகசம் செய்து வருகிறார் தல அஜித் குமார். இந்த புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏகே 61 படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் அஜித்துடன் இணைந்து சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தல அஜித்தை தொடர்ந்து பின் சென்று ரசிகர்கள் பேசியுள்ள காணொளி தற்போது வெளியாகியிருக்கிறது. கோவையிலிருந்து அஜித்தை பின்தொடர்ந்து லடாக் வரை ரசிகர்கள் வந்துள்ளனர். அஜித்தை மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். அவர்களைப் பார்த்த அஜித் ஹெல்மெட்டை கழற்றிவிட்டு அவர்களிடம் பேசுகிறார்.

மூன்று நாட்களாக உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று அஜித்திடம் அந்த இளைஞர்கள் கூற, தேடிக் கொண்டிருந்தீர்களா? நான் என்ன கொலைகாரனா அல்லது கொள்ளைக்காரனா என்று கிண்டலாக கேட்டார். மேலும் அந்த இளைஞர்களிடம் பயண விவரங்களை கேட்டறிந்தார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. மேலும் ஏகே 61 படத்திற்காக அஜித்துடன் இணைந்து படக்குழுவினர் தாய்லாந்து செல்ல உள்ளனர். அங்கு சில சண்டை காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறு.ம் பொங்கலுக்கு விஜயின் வாரிசு உடன் ஏகே 61 மோத உள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்