Categories: சினிமா

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.! டப்பிங் முடிஞ்சுது. வைரலாகும் அஜித் டப்பிங் பேசும் புகைப்படங்கள்.!

வெளியிட்டது

தல அஜித் துணிவு படத்திற்க்காக டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கருப்பு சட்டையுடன் செம்ம கெத்தாக அவர் டப்பிங் பேசும் புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர். தல அஜித் குமார் நடிப்பில் 61-வது படமாக உருவாகி வரும் படம்தான் துணிவு. இந்த படத்தை எச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். மூன்றாவது முறையாக இதே கூட்டணி இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த வலிமை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் மீண்டும் இதே கூட்டணி இணைந்து புதிய படத்தில் கமிட் ஆகி இருக்கிறது.

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.! டப்பிங் முடிஞ்சுது. வைரலாகும் அஜித் டப்பிங் பேசும் புகைப்படங்கள்.! 1

இந்த புதிய படத்தில் அஜித்குமார் வெகு நாட்களுக்குப் பிறகு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. படம் முடியும் தருவாயில் இருப்பதால் டப்பிங் பணிகள் வேகமெடுத்து இருக்கின்றன. சமீபத்தில் படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர் கூட டப்பிங் பேசும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். பிக்பாஸ் புகழ் அமீரும் டப்பிங் பேசும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

 

தற்போது அஜித்தும் தனது டப்பிங் பேசும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். மேலும் டப்பிங் முடிந்துவிட்டதாகவும் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்