Categories: சினிமா

மக்கள் மனங்களை கொள்ளையடித்தாரா கேங்ஸ்டார்.? துணிவு விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

வெளியிட்டது

தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் துணிவு. புது வருடத்தில் பொங்கலை முன்னிட்டு துணிவு படம் இன்று உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. போனி கபூர், எச்.வினோத், அஜித் ஆகியோர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கிறது இந்த படம். நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு முறை வெற்றி பெற்ற இந்த கூட்டணி மூன்றாவது முறையும் வெற்றி பெற்று இருக்கிறதா? இல்லையா? என்பதையும், இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தையும் தற்போது இந்த பதிவில் முழுமையாக காணலாம். இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு வங்கி நிறுவனமாக இருக்கிறது யுவர்ஸ் பேங்க். சிட்டியின் மையப் பகுதியில் இருக்கும் இந்த வங்கியின் சென்னை கிளையை கொள்ளையர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அரசுக்கு தெரியாமல் அந்த வங்கியின் முதலாளி 500 கோடியை அந்த வங்கியில் பதுக்கி வைத்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட ஒரு கொள்ளை கும்பல் அந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக வங்கிக்கு உள்ளே செல்கிறது.

மக்கள் மனங்களை கொள்ளையடித்தாரா கேங்ஸ்டார்.? துணிவு விமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1
ஆனால் அந்த வங்கியில் ஏற்கனவே அந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக சர்வதேச கேங்ஸ்டர் ஆன அஜீத் உள்ளே சென்று இருக்கிறார். பின்னர் அந்த பணத்தை கொள்ளையடிக்க வரும் புது கொள்ளையர்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். இந்த இரு கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த வங்கியில் யார் கொள்ளையடித்தார்கள் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார் அஜித் குமார். அவர் அப்படி என்ன செய்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறார் என்பது குறித்த படத்தின் மீதிக் கதை தான் துணிவு. இந்தப் படத்தில் அதிரடி ஆக்ஷன் கதைகளுடன் வங்கிகள் எப்படி எல்லாம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. மியூச்சுவல் ஃபண்ட், மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு போன்ற பல விஷயங்களால் மக்கள் வங்கிகளால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என அழகாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது துணிவு.


மேலும் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தல அஜித்தின் அதிரடி ஆரம்பமாகிறது. அந்த அதிரடியையும் மாஸையும் கடைசி வரைக்கும் மெயின்டைன் செய்து இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. இப்படி ஒரு அதிரடியுடன் கூடிய ஸ்டைலை அஜித்திடமிருந்து இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சர்வதேச கேங்ஸ்டராக மாறி மிரட்டி எடுத்திருக்கிறார் அஜித் என்று தான் சொல்ல வேண்டும். தனி ஒரு ஆளாக இருந்து படம் முழுவதையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார் அஜித். துணிவு படத்தில் அஜித்தின் நடிப்பு ஒன் மேன் ஆர்மியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்தின் கதாநாயகியாக வரும் மஞ்சு வாரியர்க்கும் அஜித்துக்கு நிகராக ஆக்ஷன் காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்சிகளிலும் ஆண்களுக்கு நிகராக நடித்து அசத்தியிருக்கிறார் மஞ்சு வாரியர். மேலும் கமிஷனராக வரும் சமுத்திரக்கனி, கான்ஸ்டபிள் ஆக வரும் மகாநதி சங்கர், வில்லனாக வரும் ஜான் கொக்கன் போன்றவர்கள் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

அதிரடியான சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தல அஜித்துக்கு ஏற்றார் போல் பல சண்டைக் காட்சிகளை அமைத்து இருப்பது சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை தேவையான இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறது. வழக்கம் போல ஆக்ஷன் படங்களில் வரும் காட்சிகள் போல துப்பாக்கி குண்டுகள் பாய்வதும், பொட்டு பொட்டென குண்டுகள் வெடிப்பதும், பாம்கள் பாய்வதும் ஒரு கட்டத்திற்கு மேல் சகிக்க முடியவில்லை. எத்தனை பேர் அடித்தாலும் ஹீரோவிற்கு சில லேசான காயங்கள் மட்டுமே வருவது படத்தில் வரும் லாஜிக் ஓட்டைகளாக பார்க்கப்படுகிறது. தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் பிளாஷ்பேக் காட்சிகளை கூட மிகச் சுருக்கமாக சொல்லி படத்தை வேகமாக நகர்த்தி இருக்கிறார்கள். மேலும் வங்கிகளில் தரும் விண்ணப்பங்களில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடக்கூடாது, பணத்திற்காக பேராசைப் படக்கூடாது என்கிற ஒரு நல்ல கருத்தையும் சொல்லி படம் முடிந்திருக்கிறது. மேலும் பாகம் இரண்டிற்கான ஒரு நூலையும் விட்டுவிட்டு தான் படத்தை முடித்து இருக்கிறார்கள்.


படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்: 1.  இடைவேளைக் காட்சியில் ஆட்டம் போட்டுக் கொண்டே அஜித் பேசும் ஒவ்வொரு வசனங்களும் தெறியாக உள்ளது.
2.  அதிரடியில் பின்னி எடுத்திருக்கும் மஞ்சு வாரியர்.
3.  ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மெய்சிலிர்க்க வைக்கிறது.
4.  முக்கியமாக வங்கியின் செட்டப் ரசிக்க வைக்கிறது
5.  சிறப்பான சண்டை காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் பாராட்டுக்குரியவர்.
6.  ஜிப்ரான் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
7. தியேட்டர் அதிரும் வண்ணம் அமைந்த பாடல்கள் அனைத்தும் வேற ரகம்.
8.  ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் வங்கிக் கொள்ளை.


படத்தின் நெகட்டிவ் விஷயங்கள்: 1. சில இடங்களில் ஏற்படும் லாஜிக் ஓட்டைகள்
2. படம் முழுவதும் எரிச்சலூட்டும் துப்பாக்கி சத்தம்.  மற்றபடி இந்தப் பொங்கல் துணிவு பொங்கல் தான். துணிவு படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 3.25/5

Youtube Video Code Embed Credits: Zee Studios 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்