துணிவு பட லுக்கிலேயே தனது மனைவி, மச்சான் மற்றும் கொழுந்தியாவுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார் தல அஜித் குமார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கு முன்னோடியாக விளங்கி கொண்டிருப்பவர் அஜித்குமார். எந்தவித சினிமா பின் புலமும் இல்லாமல் தானாக சினிமா துறைக்கு வந்து இன்று உட்சபட்ச நடிகராக இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படம் 90 சதவீத பணிகள் முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் ஹைதராபாத்தில் நடைபெறுவதால் சென்னையில் இருந்து அடிக்கடி ஹைதராபாத்திற்கு விமானத்தில் சென்று வருகிறார் அஜித் குமார். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம்.

மேலும் அஜித் பற்றிய ஒரு தகவல் அவ்வப்போது பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் துணிவு படம் முடிந்த பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அஜித் உலகையே சுற்றிவர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஜித்திற்கு நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற அனைத்திலும் ஆர்வம் அதிகம். சமீபத்தில் கூட துணிவு படத்திலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பைக் சாசகசம் செய்து வந்தார். அப்போது துணிவு படத்தின் ஹீரோயின் மஞ்சுவாரியரும் அவருடன் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அடுத்த ரவுண்டுக்கு அஜித் தயாராக இருப்பதாகவும், இரண்டு வருடங்களுக்கு அவர் எந்த படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்ற தகவலும் பரவி வருகிறது.
இது குறித்த உண்மைத் தன்மை தெரியவில்லை. இருந்த போதிலும் அஜித் தற்போது தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அஜித்தின் மனைவி ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டும் தங்கை ஷாமிலியும் அஜித்துடன் இணைந்து தீபாவளியை கொண்டாடி இருக்கின்றனர். இந்த புகைப்படங்களில் அவர் துணிவு படத்தில் வருவது போன்றே கெட்டப்பில் இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.