நடிகர் அஜித்குமார் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சினிமா பற்றி எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியினால் மட்டுமே திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகர் அஜித்குமார். இவர் ஆரம்பத்தில் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் இறங்கிய பிறகு அஜித்குமாருக்கு ரசிகர் பட்டாளம் பன்மடங்கு பெருகியது. இவரை இவருடைய ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைத்து வருகின்றனர். அஜித்திற்கு நடிப்பை தவிர துப்பாக்கிச் சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று பல திறமைகளை வைத்துள்ளார். தற்போது அஜித் குமார் ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார். மூன்று வருடங்களுக்குப் பின்பு காத்திருப்புக்கு பின்பு கடைசியாக வெளியான படம் தான் வலிமை. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை.

இதனால் வலிமை படத்தை இயக்கிய எச் வினோத் குழுவுடன் மீண்டும் இணைந்து ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது் இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நீண்ட காலத்திற்கு பின்னர் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. இந்த படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி நடந்து வருகிறது. படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததால், ஏகே 61 படத்தின் கதையை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அஜித் குமார். மேலும் அவரை உருவக்கேலி செய்த பலருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக உடல் எடையை குறைத்து மிக ஃபிட்டாக மாறி இருக்கிறார்.
ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னைக்கும் ஹைதராபாத்திற்கும் அடிக்கடி சென்று வரும் அஜித்தை சுற்றி விமான நிலைய ஊழியர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று அஜித் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் விசாகப்பட்டினம் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஜீத்தை விமானம் இருக்கும் இடத்திற்கு செல்லும் வரை ஒரு பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர். அவர் எந்த சீட்டிலும் அமராமல் மக்களோடு மக்களாக பேருந்துகளின் கம்பியை பிடித்தபடி பயணம் செய்தார். நடிகர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக நின்று கொண்டு பயணம் செய்தால் அஜித்தை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..