தல அஜித்தை அவரது மனைவி ஷாலினி க்யூட்டாக போட்டோ பிடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரை உலகில் க்யூட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி. இவர்கள் எது செய்தாலும் அது வைரலாகி விடுவது வழக்கமாக இருக்கிறது. தல அஜித் குமார் படங்களில் நடிப்பது, பைக் ரைடு செல்வது, சாகசங்கள் செய்வது என்று பிஸியாக இருந்து வருகிறார். இந்த பிஸியான நேரத்திலும் அவர் அடிக்கடி தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார். சமீபத்தில் instagram கணக்கை தொடங்கிய ஷாலினி, தனது கணவருடன் வெளிநாடு சென்று வரும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த பின்னர், தற்போது அவர் ஏகே 62 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைய இருக்கும் நேரத்திலும் கூட படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாகவும் தெரிகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தனது 62வது படத்தில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் பல குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனது ட்விட்டர் பக்கத்திலும் அஜித்தின் புகைப்படங்களை நீக்கியும் ஏகே 62 என்ற வாசகத்தையும் நீக்கி இருந்தார் விக்னேஷ் சிவன் இதனால் இந்த தகவலை சூசகமாக உறுதிப்படுத்தியிருந்தார் விக்னேஷ் சிவன். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் மகிழ் திருமேனி ஏ கே 62 படத்தை இயக்க இருக்கிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஏங்கி காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஷூட்டிங்கில் இருந்து சிறிது இடைவெளி எடுத்திருக்கும் தல அஜித் குமார் தற்போது லண்டனுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் தனது விடுமுறை காலத்தை கழித்து வருகிறார். அவருடன் அவரது மனைவி ஷாலினியும் சென்றிருக்கிறார். அங்கு அவர் கடற்கரை ஒன்றில் வைத்து தனது கணவர் அஜித்குமாரை புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ஷாலினி. அதில் புது கெட்டப்பில் தல அஜித் குமார் போஸ் கொடுக்க பின்னால் கடற்கரையில் சூரியன் உதயமாகிறது. அந்தப் புகைப்படத்தை ஷாலினி பகிர்ந்திருக்கிறார். மேலும் தன்னுடைய சூரிய ஒளி தன்னுடைய கணவர் என்று ஷாலினி குறிப்பிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்களுக்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் தொடங்கி பலரும் லைக்குகள் போட்டு வருகின்றனர். அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.