தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் அஜித். எந்த வித பின் புலமையும் இன்றி இப்பொது சினிமாவின் ஆகா சிறந்த நாயகனாக தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய “வலிமை” திரைப்படம் இந்த ஆண்டின் ஒரு தமிழ் படங்களின் மிக பெரிய ஒப்பனிங் பெற்ற படம் மட்டுமின்றி 2ஆவது அதிக வசூல் செய்த படமாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொது மீண்டும் ஹெச். வினோத், போனி கபூர், தல அஜித் இணையும் 3வது படம் ஹைதராபாத்தில் செட் போடப்பட்டு முன்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளியான “நேர்கொண்ட பார்வை, வலிமை” என இரண்டு படங்களுமே மிக பெரிய வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
அதிலும் நீண்ட ஆண்டுகள் கழித்து நெகட்டிவ் ரோலில் தல நடிப்பதாக செய்திகள் வெளியானதால் இன்னும் ரசிகர்கள் ஆர்வமாக படத்தை எதிர்பார்த்து உள்ளனர். படத்திலிருந்து சில அஜித்தின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இன்னும் கூடுதல் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியிருந்தார். அதே போல சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.
அஜித் ஸ்டைலிஷ் நெகட்டிவ் ரோலில் நடித்த பில்லா, மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்கள் மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அதிலும் அஜித் இந்த படத்தில் 2 வேடங்களில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நடிக்க இருப்பதாலும் படம் படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த புகைப்படங்கள் இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு வெள்ளை கலர் ஷர்ட் மற்றும் பச்சை நிற பெண்ட் அணிந்துள்ள அஜித் பார்ப்பதற்கே செம்ம ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை மிகவும் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து முதற்க்கட்ட படப்பிடிப்பை முடித்து கொண்டுள்ள தல அஜித் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான ஐரோப்ப நாட்டின் பைக் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இப்பொது படத்தின் படப்பிடிப்பு வடசென்னையிலுள்ள மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு கார் சீன் துறைமுகம் போன்ற இடம் ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஸ்சேடியுலில் நடிகர் அஜித் இல்லாத காரணத்தால் அவர் படப்பிடிப்பு தளத்தில் காணப்படவில்லை. இயக்குனர் ஹெச். வினோத் மட்டுமே மானிட்டர் பார்த்த படி நின்று கொண்டிருக்கிறார். இந்த சிறிய படைப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து, துவங்கியுள்ள அடுத்த ஸ்சேடியுலில் நடிகர் அஜித் பங்கேற்பர் என கூறப்படுகிறது.
தன்னுடைய கனவான ஐரோப்பவில் பைக் ட்ரிப்பை முடித்து கொண்டு இப்பொது நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார். அவர் ஏர்போர்ட்டில் இருந்து வரும் வீடியோ அதை தொடர்ந்து தற்போது துப்பாக்கி சூட்டில் களமிறங்யுள்ளார் அஜித். ஆம், தற்போது திருச்சியில் நடைபெறவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள திருச்சி சென்றுள்ளார். அஜித் எற்கனவே தமிழ்நாடு அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பங்கேற்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த விடீயோவை நீங்களும் காண…..
VIdeo Courtesy – Celebrities Viral Videos