தமிழக கிரிக்கெட் வீரருடன் தலைவாசல் விஜய் மகளுக்கு நடந்த திருமணம்.! வெளியான புகைப்படங்கள்.!

வெளியிட்டது

நடிகர் தலைவாசல் விஜயின் மகளும் நீச்சல் வீராங்கனையுமான ஜெயவீனாக்கு தற்போது தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரருடன் திருமணம் முடிந்திருக்கிறது. நேற்று இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்ற நிலையில் இன்று திருமணம் முடிந்திருக்கிறது.

தமிழக கிரிக்கெட் வீரருடன் தலைவாசல் விஜய் மகளுக்கு நடந்த திருமணம்.! வெளியான புகைப்படங்கள்.! 1

திருமண புகைப்படங்கள் வெளியாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது. பலரும் தலைவாசல் விஜய் மகளுக்கும் கிரிக்கெட் வீரருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்திருந்தவர் நடிகர் தலைவாசல் விஜய். இவர் தற்போதும் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மகள் ஜெயவீனாவிற்கு இன்று சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனா சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றவர் ஆவார்.

குறிப்பாக நேபாள நாட்டில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் பெற்று இருந்தார். இவருக்கும் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி கிரிக்கெட் விளையாடிய அபராஜித் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்திருக்கிறது.

அந்த புகைப்படங்களை அவரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 2012 ஆம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையில் பங்கேற்ற அபராஜித் 2013 ஆம் ஆண்டு துலிக் கோப்பையில் பங்கேற்று இரட்டை சதம் அடித்திருந்தார்.

தற்போது இவர் சேப்பாக்கம் சூப்பர் கில்லி அணியின் கேப்டன் ஆகவும் இருக்கிறார். சமீப காலமாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் இருவர் வீட்டில் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை இருவரின் திருமண வரவேற்பு நடந்தது .

.
இன்று காலை திருவான்மியூரில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறினர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்