Categories: சினிமா

மரண மாஸாக வெளியானது சுந்தர் சியின் தலைநகரம் 2 ட்ரைலர்.! இதோ வீடியோ

வெளியிட்டது

தலைநகரம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளாராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித் தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் சுந்தர் சி. பின்னர் 2006ம் ஆண்டு வெளியான தலைநகரம் என்ற படத்தின் மூலமாக நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இயக்குனர் சுராஜ் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சுந்தர் சியுடன் இணைந்து வடிவேலுவின் நாய் சேகரின் காமெடிகள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்த அடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார் சுந்தர் சி. இவரின் அரண்மனை படம் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியது. தொடர்ந்து நல்ல படங்களை இயக்கி வரும் சுந்தர் சி தற்போது தலைநகரம் 2 படத்தில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மரண மாஸாக வெளியானது சுந்தர் சியின் தலைநகரம் 2 ட்ரைலர்.! இதோ வீடியோ 1

மேலும் கைவசம் அரண்மனை 4, ஒன் டூ ஒன், வல்லான் ஆகிய படங்களை வைத்து இருக்கிறார். இந்த படத்தக வி.இசட். துரை இயக்கி வருகிறார். வி.இசட்.துரை ஏற்கனவே முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற படங்களை இயக்கியவர். தற்போது படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து பாலக் லால்வாணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரைட் ஐ கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.பிரபாகரன் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவை காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்