Categories: சினிமா

தலைவர் 170 படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்.!

வெளியிட்டது

இன்று காலை ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அனைவரும் தல அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரஜினிகாந்த் உடன் 170 வது படத்தில் இணைந்திருப்பதாக லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் குறிப்பிட்டு தகுந்த தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா ப்ரொடக்ஷன். இந்த நிறுவனம் ஏகே 62, லால் சலாம், பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு என்று பல படங்களில் வரிசையாக கமிட் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் அறிவிப்பில் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தை தயாரிக்க இருப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தலைவர் 170 படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்.! 1

அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “லைக்கா குடும்பத் தலைவர் திரு சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். லைக்கா ப்ரொடக்சன் நிறுவனத்தில் மற்றொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம். இயக்குனர் திரு த.செ ஞானவேல் இயக்கத்தில், இசை வழி நம் இதயங்களை இணைக்கும் திரு அனிருத் திசையில் பிரம்மாண்டமான திரைப்படங்களை படைத்தளிக்கும் திரு சுபாஸ்கரன் தயாரிப்பில், லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தலைமை பொறுப்பாளர் திரு ஜி எம் தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் தலைவர் 170 திரைப்படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைக்கா ப்ரோடக்‌ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 இல் மாபெரும் கொண்டாடத்திற்கு தயாராவோம் நன்றி” என்று தங்களது விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்