Thalapathy 65 First look ரிலீஸ் தேதியை அறிவித்த Sun pictures! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

Thalapathy 65 First look ரிலீஸ் தேதியை அறிவித்த Sun pictures! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 1

மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 65 படத்தின் first look வெளியாகும் என்று தளபதி ரசிகர்கள் அப்டேட் காக காத்திருந்தனர்.

இந்நிலையில் வரும் ஜூன் 21 மாலை 6 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படத்தின் first look வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்