தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில் அமர்ந்து இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கிறது. மிகப்பெரிய வசூல் ஓப்பனிங்கை கொண்ட நடிகர் விஜய் , கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு அவர் சினிமாவை விட்டு வெளியேற உள்ளார்.

இவர் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்ட், மமிதா பைஜூ,பிரகாஷ் ராஜ் , நரேன் , பாபி தியால் ஆகியோர் நடிக்க உள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். தற்போது இப்படத்தின் பூஜை இன்று ஆரம்பமாகி உள்ளது. நாளை படப்பிடிப்பு நடக்க உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பூமி பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.