தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் உள்ளது. தனது நடிப்பினால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டு இருக்கிறார் விஜய். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது அரசியலில் இறங்கி உள்ளார்.

இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த கோட் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு கேவிஎன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தற்போது இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் யார் என்பது குறித்து தகவல்களை இன்று மாலை முதல் படக்குழு வெளியிட உள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டொபர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் யார் என்பதை காண ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.