Categories: சினிமா

Thalapathy69-ல் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! வெளியான அறிவிப்பு..!

வெளியிட்டது

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். சாதாரணமாகவே அவரது படங்கள் கோடிகளில் வியாபாரம் ஆகி வருகிறது. மேலும் 100கோடி வசூல் என்பது அவரின் படத்திற்கு சர்வ சாதாரணமான விஷயமாக அமைந்து இருக்கிறது. தற்போது விஜய் நடித்து இருக்கும் கோட் படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Thalapathy69-ல் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! வெளியான அறிவிப்பு..! 1

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தமிழில் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது ஆகும். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டொபர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியால் நடிக்க உள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. ரசிகர்கள் இதனால் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏற்கனவே இவர் சூர்யாவுக்கு வில்லனாக கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது தளபதிக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்