Categories: சினிமா

வெறித்தனமாக வெளியாகியது Thalapathy69 அப்டேட்…! இயக்குனர் யாரு தெரியுமா..! செம்ம மாஸாக வெளியான போஸ்டர்..!

வெளியிட்டது

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். சாதாரணமாகவே அவரது படங்கள் கோடிகளில் வியாபாரம் ஆகி வருகிறது. மேலும் 100கோடி வசூல் என்பது அவரின் படத்திற்கு சர்வ சாதாரணமான விஷயமாக அமைந்து இருக்கிறது. தற்போது விஜய் நடித்து இருக்கும் கோட் படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

வெறித்தனமாக வெளியாகியது Thalapathy69 அப்டேட்...! இயக்குனர் யாரு தெரியுமா..! செம்ம மாஸாக வெளியான போஸ்டர்..! 1

இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது.

இந்நிலையில் விஜயின் கடைசி படமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தநிலையில், படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தினை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்