Car க்கு Insurance இல்லையா.? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் | Vijay

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது படம் வெளியானால் போதும் தியேட்டரே திருவிழா போல் மாறிவிடும். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

Car க்கு Insurance இல்லையா.? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் | Vijay 1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாரிக்கும் இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. விஜய் எப்பொழுதும் தனது படங்களில் சில இடங்களில் அரசியல் பேசுவது உண்டு. கத்தி படத்தில் 2ஜி அலைக்கற்றை பற்றி அவர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே போல் தலைவா படத்தில் அரசியல் உள்ளது என்று சொல்லி அந்த படம் வெளிவருவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்தித்தார் விஜய்.

இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களம் காணுகின்றனர். அதனால் இன்று காலையே ஓட்டு போட வந்தார் விஜய். அப்போது விஜய் மாருதி சுசூகி செலிரியோ என்ற சிவப்பு நிற காரில் வந்தார். தற்போது நெட்டிசன்கள் அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என்று தேடி பிடித்து புகைப்படத்தை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த கார் விஜய் பெயரில் 30 மே 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத காரை ஓட்டி வந்த விஜயை இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர். . அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்