விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக தொகுத்து வருகிறார். இவரின் பேச்சுக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் படையே உள்ளது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒரு கருத்தை எடுத்து விவாதித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில், படித்துக்கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இடையே விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டியை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது அன்னையுடன் கலந்துகொண்டு உள்ளார். இதில் பேசிய அந்த மாணவன், தாய் மற்றும் தந்தையை நல்ல இடத்தில் வைக்க வேண்டும் என கூறி இருந்தார்.
மாணவரின் இந்த பேச்சைக்கேட்ட நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அந்த மாணவருக்கு உடனடியாக உதவுங்கள் என கூறி அவருக்கு தேவையானதை செய்து கொடுத்து உள்ளார். தளபதி விஜயின் இந்த செயலை கண்டு மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் மாணவரின் குடும்பமும் அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளது.