நடிகர் விஜய் தற்போது தன்னை பார்க்க வந்த மாற்றித்திறனாளி ரசிகர் ஒருவரை கைகளில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீப காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்காக தனது பனையூர் கெஸ்ட் ஹவுஸில் அடிக்கடி மீட்டிங்குகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட தனது ரசிகர்களை அந்த வீட்டில் வைத்து சந்தித்து இருந்தார் விஜய். அப்போது தனது ரசிகர்களுக்காக மிகப்பெரிய பிரியாணி விருந்தே ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல இன்றும் வேறு நான்கு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்திப்பதற்காக பனையூரில் ஒரு சிறப்பு மீட்டிங் ஏற்பாடு செய்ய இருந்தார் விஜய். அந்த மீட்டிங்க்கு தற்போது விஜய் காரில் வந்திருந்தார்.

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர்கள் இருவரும் சமீப காலமாக பேசிக் கொள்வதே இல்லை. ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் பணம் வாங்கிக் கொண்டு சில செயல்படுவதாக எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதையெல்லாம் போக்கும் விதமாக தற்போது விஜய் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களின் மணக்குறையை தொடர்ந்து கேட்டு வருகிறார். ஏற்கனவே ஒருமுறை இது போன்ற மீட்டிங் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று மீண்டும் வேறு நான்கு மாவட்டங்களை அழைத்து பேசியிருக்கிறார். இன்றும் தனது ரசிகர்களுக்காக பிரியாணி விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் விஜய்.
பனையூர் வீட்டிற்கு கருப்பு நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வாரிசு கெட்டப்பில் என்ட்ரி கொடுத்தார். மேலும் அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து விட்டு உள்ளே சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வெகுநேரமாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவர் விஜயை நேரில் சென்று அவரை தனது கைகளால் தூக்கி சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜயின் இந்த மனிதனை மிக்க செயலை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி பல மில்லியன் லைக்குகளை குறித்து வருகிறது.