3 நாளில் ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய திரிஷா.! லோகேஷை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற மூன்றாவது நாளே திரிஷா மீண்டும் சென்னைக்கு திரும்பி இருப்பதால், அவர் குறித்து மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. முதல் சீனிலேயே வில்லன் மன்சூர் அலிகான் அல்லது மிஷ்கின் இருவரில் வருவர் திரிஷாவை கொன்றுவிட்டதாகவும் அதனால் தான் அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் இணைய நெட்டிசன்கள் காமெடியாக மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, தளபதி விஜய், திரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நடன இயக்கனர் சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க இருக்கின்றனர். எனவே இந்த படத்திற்க்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளி வந்த விக்ரம் படம் 500 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருந்தது. எனவே லோகேஷ் கனகராஜுக்கான மவுசு தற்போது அதிகரித்து இருக்கிறது.

3 நாளில் ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய திரிஷா.! லோகேஷை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.! 1
குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை விஜயை வைத்து இயக்கிய பின்பு மீண்டும் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் செய்தி வெளியான நாள் தொடங்கி, விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருந்தனர். மேலும் செல்லும் இடங்களில் எல்லாம் லோகேஷ் கனகராஜை சுற்றி வளைத்துக் கொண்டு தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுகளை கேட்டு வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிடப்பட்டு வந்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ஒரு சிறிய டீசருடன் படத்தின் பெயர் “லியோ” என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படக்குழுவினர் அனைவரும் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் செல்லும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி இருந்தது.

இந்த நிலையில் மூன்று நாட்கள் கூட முடிவடையாத நிலையில் தற்போது திரிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பி மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் விக்ரம் படத்தில் காயத்ரியை தலையை வெட்டி கதையை முடிப்பது போல் திரிஷாவையும் கொன்று விட்டீர்களா? என்றும் படத்தின் முதல் சீன் மன்சூர் அலிகான் அல்லது மிஷ்கின் இருவரில் யாராவது, கேங்ஸ்டர் ஆக இருக்கும் கௌதம் மேனன் பேச்சைக் கேட்டு திரிஷாவை கொலை செய்து விடுவார்கள் என்று தங்கள் யூகங்களை கற்பனைகளாகவும், மீம்ஸ்கள் ஆகவும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இதனால் இணையதளமே தற்போது திரிஷாவின் மீல்ஸ்களால் நிரம்பி வழிகிறது. இதைப் பார்த்த சிலர் ஒரு வேள இருக்குமோ? என்று காமெடியாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்