70 வயதை கடந்தும் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் திரையுலகில் முதலிடத்தில் கோலோச்சி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “அண்ணாதே” படம் கடும் விமர்சங்களை பெற்றாலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அது ரஜினி என்ற ஒரு மனிதருக்கான கிடைத்த வசூல் அது.

இப்பொது ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் என ஏற்கனவே தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது.
அறிமுகமான “கோலமாவு கோகிலா” படத்தில் அடைந்த வெற்றியை விட அடுத்து வெளிவந்த “டாக்டர்” படத்தின் மூலம் இரட்டிப்பு ஆக்கினார் நெல்சன். பின் உடனே விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என பலர் நடிக்க, அனிருத் இசையமைப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “பீஸ்ட்” படம், விஜயின் நடிப்பு, அனிருத்தின் இசை, சில இடங்களில் வரும் காமெடி என சில விஷயங்களே பாராட்ட பெற்றன. பல கடுமையான விமர்சங்களை பெற்றது.
நெல்சன் குறிப்பாக கடும் விமர்சனத்திற்கு ஆளானார். உங்களுக்கு பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்க தெரியவில்லை என பலரும் அவர் மேல் மட்டுமே குற்றம் சாட்டினார். இதனால் அவருக்கு ரஜினியை இயக்கம் வாய்ப்பு கூட பறிபோனது என பலரும் கூறிவந்தனர்.
ஆனால் படம் நிறுத்தப்பட்டது என தயாரிப்பு நிறுவனம் எந்த அறிக்கையும் கொடுக்காமல் இருந்தது. திடீரென ரஜினி படத்திற்கு ஓகே சொன்னதாகவும் படம் கைவிடப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
இப்பொது, வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தான் நெல்சன் வெளிஊர்களில் சென்று லொகேஷன் பார்த்து வருகிறார் எனவும் கூறுகிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினியின் பிறந்தநாளில் வெளியாக கூடும் எனவும் கூறப்படுகிறது.