பிக்பாஸ் தாமரை செல்வி தற்போது தனது வீட்டுக்காக 75 இன்ச் டிவி ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தாமரையின் மகன் கரண்டியால் கிரிக்கெட் விளையாடுவது போன்று செய்து பழைய டீவியை உடைத்து விட்டதால் தற்போது அவர் புதிதாக டிவி ஒன்றை வாங்கி இருக்கிறார். பிக்பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரை. சாமானிய மக்களில் ஒருவராக கிராமத்தில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற போட்டியாளர் தான் தாமரை செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சிறு வயதில் முதல் அடிப்படை தேவைகளுக்கும் அலைந்து திரிந்து படாத கஷ்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தெருக்கூத்து நாடகத்தில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்த தாமரை, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி துளியும் தெரியாமல் அனைவரையும் விட சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட குடும்ப சூழலில் வளர்ந்த தாமரையின் அம்மா மற்றும் சகோதர, சகோதரிகளின் குடும்பம் இன்னும் ஏழ்மை நிலையிலேயே உள்ளது. தாமரையின் அம்மா ஒரு சிறு குடிசை வீட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மழைக்காலங்களில் பூச்சிகள் வரும் என்பதால் அருகில் உள்ள பள்ளிகள் அல்லது கோவில்களில் சென்று உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் தாமரையின் தாயார். ஒரு பேட்டியின் போது நாடகத்தில் கிடைக்கும் பணத்தை 200 அல்லது 300 ரூபாய் தான் கிடைக்கும் அதை அப்படியே கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிடுவார், இன்று வரை அவர்தான் எங்களைப் பார்த்து கொள்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். தற்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் அவரது தாயாருக்கு புதிதாக வீடு ஒன்று கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகன் கரண்டியை வைத்து கிரிக்கெட் விளையாடுவது போல செய்து டீவியை உடைத்துவிட்டதால் தற்போது தவணை முறையில் புது டிவி வாங்கி இருப்பதாக கூறியுள்ளார். 75 இன்ச் சைஸ் டிவி வாங்கி இருக்கிறார் தாமரை. தனது மாமியார் நடங்கங்களை விரும்பி பார்ப்பார் பழைய டிவி உடைந்து விட்டதால் அவசரமாக புது டிவி வாங்கி இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.!! Watch the Below Video.!
Youtube video code embed credits: Lotus Family